உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா!

‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா!


‛ஆர் ஆர் ஆர்' படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛வாரணாசி' என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய படத்தில் நடிக்கிறார்.

இந்த வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் மஞ்சள் நிற புடவை கெட்டப்பில் துப்பாக்கியை வைத்து யாரையோ அவர் குறி வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஆக்சன் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் படங்களில் நடிக்க தான் வாங்குவது போன்று 30 கோடி சம்பளம் பிரியங்கா சோப்ரா வாங்கி இருப்பதாக டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !