ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள்
ADDED : 25 minutes ago
தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான படம் 'கெவி'. கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கள் வாழ்விற்காகப் போராடும் மலையக மக்களின் கதை. ஷீலா, ஜாக்குலின் லிடியா, மற்றும் ஆதவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்ட் அப் டிரையாங்கில்ஸ் பிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, இந்த படம் 98வது ஆஸ்கார் அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதே போன்று 'தலித் சுப்பையா: கலககாரர்களின் குரல்' என்ற ஆவணப் படம் ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறைக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கிரிதரன் இயக்கி உள்ளார்.