உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா

எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா


'லெனின் பாண்டியன்' படத்தில் இசையமைப்பாளர் கங்கைஅமரன் ஜோடியாக நடிக்கிறார் ரோஜா. 13 ஆண்டுகளுக்குபின் அவர் தமிழில் நடிப்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ரோஜா,''நான் முதலில் ஹீரோயினாக நடித்தேன். பின்னர் காவலன் படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன். அந்த படப்பிடிப்பு தளத்தில் நீங்களா என்று மிரண்டார் விஜய். பின்னர், அரசியலில் பிஸியாக இருந்ததால் நடிக்கவில்லை. என் நீண்ட கால நண்பர் சுப்புபஞ்சு அழைத்ததால் இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னேன். கிராமத்து வேடத்தில் அதிக மேக்கப் இல்லாமல் நடித்து இருக்கிறேன்.

நாங்கள் நடிக்கிற காலத்தில் மீனா, தேவயானி, ரம்பா உட்பட பல ஹீரோயின்கள் நட்பாக இருந்தோம். இப்போது கேரவன் வந்ததால் எல்லாம் மாறிவிட்டது. என் படங்களை கடுமையாக விமர்சிப்பது என் அண்ணன்தான். அவர் பாகுபாடு பார்க்காமல் விமர்சனம் செய்வார். இத்தனை ஆண்டுகள் ஆர்.கே. செல்வமணியுடனான மண வாழ்க்கை சிறப்பாக செல்கிறது. அவர் முன்பே சொன்ன மாதிரி 'சரிம்மா, சாரிம்மா' என்ற வார்த்கைளை அவர் அதிகம் பயன்படுத்துவதால் எங்களுக்குள் மனஸ்தாபம் அதிகம் இல்லை. குடும்பத்தில் இரண்டு தரப்பும் விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !