ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்!
ADDED : 6 minutes ago
நடிகர் ஆர்யா நடிப்பில் ரிலீஸூக்கு தயாராக உள்ள படங்கள் 'மிஸ்டர் எக்ஸ், ஆனந்தன் காடு'. இவைகள் அல்லாமல் அவர் தற்போது வேட்டுவம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து 'சார்பட்டா பரம்பரை' 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் ஆர்யா பிரபல மலையாள இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கின்றார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என்கிறார்கள்.