தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து'
கடந்த ஆண்டில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'லப்பர் பந்து'. இந்த படம் வெகுஜன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஏற்கனவே இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க விருப்பப் பட்டார். இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தெலுங்கில் நின்னிலா நின்னிலா படத்தை இயக்கிய அனி ஐ.வி. சசி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராஜசேகர், சுவாசிகா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், சஞ்சனா கதாபாத்திரத்தில் ராஜசேகரின் மகள் சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இன்னும் ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் முடிவாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.