உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ்

இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ்


2025ம் ஆண்டின் கடைசி சில வாரங்களில் இருக்கிறோம். இந்த வருடமும் தமிழ் சினிமாவில் வாராவாரம் சராசரியாக ஐந்து படங்கள் வெளியாகி வருகின்றது. இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அங்கம்மாள், இரவின் விழிகள், மாஸ்க், மிடில் கிளாஸ், தீயவர் குலை நடுங்க, யெல்லோ” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 245ஐ கடந்துவிடும். அடுத்த வாரம் வெளியாகும் படங்களையும் சேர்த்தால் 250 படங்களைக் கடந்துவிடுவது உறுதி.

அடுத்த மாத டிசம்பர் கணக்கையும் சேர்த்தால் தான் 250 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் மாதத்திலேயே 250 படங்கள் வரை வெளியாவது தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத ஒன்று. கடந்த 2024ம் வருடத்தில் நவம்பர் மாதம் வரையில் 210 படங்கள் வரைதான் வெளியானது. இந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 40 படங்கள் அதிகம்.

இந்த வருடம் நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி, ஓரிரு காட்சிகள், ஓரிரு நாட்களுடன் காணாமல் போனது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !