உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ?

இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ?


டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் கவின் ஒருவர். டிவி சீரியல்களில் நடித்த காலத்திலேயே அவருக்கென ஒரு வரவேற்பு இருந்தது. அதை சினிமாவில் அறிமுகமான பிறகும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். 2019ல் வெளிவந்த 'நட்புனா என்னனு தெரியுமா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'லிப்ட்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த 'டாடா' படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதற்கடுத்து வெளிவந்த 'ஸ்டார்' படம் மிகச் சுமாராக ஓடியது.

கடந்த வருடம் கவின் நடித்து வெளியான 'பிளடி பெக்கர்', இரண்டு மாதங்கள் முன்பு வெளியான 'கிஸ்' ஆகிய படங்கள் வந்த சுவடு தெரியாமல் தோல்வியடைந்தது. தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்க ஆசைப்படும் கவினுக்கு கடந்த இரண்டு படங்களின் தோல்வி எதிர்பாராதது. இந்த வாரம் நவம்பர் 21ம் தேதி அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'மாஸ்க்' படம் வெளியாகிறது. இந்தப் படமாவது அவர் இழந்த வெற்றியைப் பெற்றுத் தருமா என திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !