26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம்
ADDED : 10 minutes ago
கடந்த 1999ம் ஆண்டில் சரண் இயக்கத்தில் அஜித் குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அமர்க்களம்'. அஜித்தின் 25வது படமாக வெளியாகி வரவேற்பை பெற்றது. காதலும், ஆக் ஷன் கலந்த படமாக வெளியானது. பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. இந்த படத்தின்போது தான் அஜித், ஷாலினி காதலிக்க தொடங்கி பின்னாளில் திருமணமும் செய்தனர்.
இந்த நிலையில் 26 வருடங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இன்றைய 4கே தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி படத்தை மாற்றி அடுத்தாண்டு, பிப்ரவரி 12ம் தேதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். நேற்று ஷாலினிக்கு பிறந்தநாள், இதையொட்டி இந்த அறிவிப்பு வெளியானது.