100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்'
ADDED : 3 hours ago
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் டியூட். கீர்த்தீஸ்வரன் இயக்கினார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இளவட்ட ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு பெற்ற இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதேபோல் இந்த படத்தின் பாடல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஊறும் பிளட் என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சாய் அபயங்கர். மேலும் ‛லவ் யூ மக்களே' என்றும் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.