கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா?
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்கு இன்னமும் நல்ல கதை கிடைக்கவில்லை. இயக்குனர் சுந்தர்.சி விலகிவிட்டார். அந்த படத்தை இயக்க வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலர் ஆசைப்படுகிற நிலையில், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தை இயக்கிய நித்திலனும் ரஜினிக்கு கதை சொல்லியிருக்கிறாராம். அந்த கதை ரஜினிக்கு பிடித்து இருப்பதாகவும் தகவல். ஆனால், இன்னமும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இதற்குமுன்பு பாரதிராஜா, விதார்த் நடித்த குரங்கு பொம்மை என்ற படத்தையும் இயக்கியவர் நித்திலன். விஜய்சேதுபதிக்கு மகாராஜா என்ற பெரிய வெற்றியை தேடித்தந்து, 100 கோடியையும் வசூலித்தது. 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த படம் ரிலீஸ் ஆனது. ஆனாலும், இன்னமும் அவர் அடுத்த படத்தை தொடங்கவில்லை. பல ஹீரோக்கள் கால்ஷீட் கொடுக்காத நிலையில், அவர் இன்னொரு புதுமுக ஹீரோயின் நடிக்கும் படத்தை தொடங்க இருந்தார்.
இந்த சூழ்நிலையில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். இவரை தவிர, இன்னும் சிலர் ரஜினிக்கு கதை சொல்லியிருப்பதாக தகவல். கதை விஷயத்தில் ரஜினி எடுக்கும் முடிவே இறுதியானது என தயாரிப்பாளர் கமல்ஹாசன் சொல்லிவிட்டதால், ரஜினி எந்த கதையை ஓகே செய்யப் போகிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. ரஜினிக்கு கதை கேட்க தனி குழு, மானேஜர், நண்பர்கள் வட்டாரம் கிடையாது. அவர் மட்டுமே கதை கேட்டு முடிவு செய்வார்.