‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம்
ADDED : 23 minutes ago
கடந்த 2023ம் ஆண்டில் ஹிந்தியில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான படம் 'கில்'. இதை தமிழில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. . ரமேஷ் வர்மா என்கிற தெலுங்கு இயக்குனர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் கில் படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இப்போது இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. இப்படத்தில் நடிக்கும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டாராம் துருவ். இயக்குனர் ஒருவர் சொன்ன அறிவுரையை ஏற்று இந்த படத்திலிருந்து அவர் விலகியதாக சொல்கிறார்கள்.