5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன்
வெங்காயம், பயாஸ் கோப் படங்களை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். வித்தியாசமான, மாறுபட்ட படங்களை எடுப்பது இவரின் பாலிசி. சமீபத்தில் இவரின் ஒன் மேன் படத்தை ஆயிரம் பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் அறிமுகப்படுத்தினர்.
இந்த படத்தில் என்ன புதுசு என்று சங்கிகிரி ராஜ்குமாரிடம் கேட்டால் “இந்தப் படத்தின் கதை ஏற்காடில் தொடங்கி, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகளில் நடிக்கிறது. நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். ஆம், இந்த படத்தில் நடித்தது, இயக்கியது, தொழில்நுட்பட கலைஞராக பணியாற்றியது என அனைத்தும் நான் மட்டுமே.
தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் மற்ற மொழி வரலாற்றில் கூட ஒருவரே இத்தனை பணிகளை செய்தது இல்லை. திரைக்கதை, வசனம், மேக்கப் , காஸ்டியூம், கிரேன் ட்ராலி மூவ்மெண்ட், ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங் டப்பிங், 3d மாடலிங், டெக்சரிங், அனிமேஷன், காம்போசிட், கலர் கரக் ஷன் என ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் யாருடைய உதவியும் இன்றி தனி ஒருவனாக எடுத்து முடித்திருக்கிறேன்.
மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, வாட்டிகன், மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தி முடித்தேன். தனி ஒருவனாக செய்து முடித்ததை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக தொடக்க முதல் இறுதி வரை மற்றொரு கேமராவில் படப்பிடிப்பை பதிவு செய்து வைத்திருக்கிறேன். இதில் 5 கேரக்டரில் நடித்து இருக்கிறேன். 6 ஆண்டுகளாக இந்த படம் நடக்கிறது. டிசம்பரில் வெளியிட பிளான்'' என்கிறார்.