உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி

படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி


தென்னிந்திய சினிமாவின் முன்னணி இளம் நடிகை கிர்த்தி ஷெட்டி. தெலுங்கு 'உப்பன்னா' படத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணிக்கு வந்திருக்கிறார்.

தமிழில் கார்த்தியுடன் 'வா வாத்தியார்', ரவி மோகனுடன் 'ஜீனி', பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' அடுத்தடுத்து அவரது படங்கள் வர இருக்கிறது. ஆனாலும் அவர் படம் இயக்கும் ஆசையிலும் இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்குமா, ஒரு புது விஷயமா இருக்குமா என்று ஒரு சினிமா ரசிகையாகப் பார்த்துதான் கதைகளைத் தேர்வு செய்கிறேன். என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக கிளாசிக்கல், வெஸ்டர்ன்னு டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறேன். பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்னு ஆக்ஷனுக்கான பயிற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆக்ஷன் கதைகளில் நடிக்க அதிக விருப்பம் உண்டு. ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் பண்ணவும் ஆர்வம் இருக்கு.

எந்த சினிமாப் பின்னணியும் இல்லாமல்தான் இங்கே வந்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு படம் எப்படித் தயாராகிறது என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனா, இங்கே ஒவ்வொருத்தரோட கடின உழைப்பிற்குப் பின்னாடியும் அதிக பொறுப்பில் இயக்குநர்தான் இருக்கிறார். அதனால்தான் டைரக்ஷன் மீது பெரிய ஈர்ப்பு வந்தது. இது ரொம்ப சவாலான வேலை. எனக்கும் சவால்கள் பிடிக்கும். அதனால் இயக்கும் ஆசை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஹீரோயினாக நான் அறிமுகமான 'உப்பென்னா' இயக்குநர் புச்சி பாபு சாரிலிருந்து இப்ப பண்ணுற படங்களின் இயக்குநர்கள் வரை ஒவ்வொருத்தரையுமே குருவா நினைச்சு, டைரக்ஷன் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு கிர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !