விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள பூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் இணை தயாரிப்பாளரான நடிகை சார்மி கவுர் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவது குறித்து தங்களது கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பூரியுடன் பணிபுரிந்தது நிறைவாக இருந்ததாக விஜய் சேதுபதி நன்றி கூறியுள்ளார்.
இப்படத்திற்கு தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடாமலேயே படப்பிடிப்பை முடித்துள்ளனர். செப்டம்பர் 23ம் தேதி இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணமடைந்ததால் அந்த விழாவை தள்ளி வைத்தார்கள்.
விரைவில் படத் தலைப்புப் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.