உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம்

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம்


தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை பரபரப்பாகப் பேசப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், அவர் கடைசியாக நடித்து வெளிவந்த சில தமிழ்ப் படங்கள் சரியாகப் போகவில்லை. 2018க்குப் பிறகு அவர் நடித்து வருடத்திற்கு ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் வெளியானது. அதிலும் கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'சைரன், ரகு தாத்தா' இரண்டுமே தோல்விப் படங்களாகவே அமைந்தது.

இந்த வாரம் நவம்பர் 28ம் தேதி கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் வெளியாக உள்ளது. கடந்த வருடமே இப்படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். அதன்பின் இந்த வருடம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், படம் வெளியாகவில்லை. தள்ளிப் போகும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் கூட வெளியிடவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நவம்பர் 28 வெளியாகும் என்று அறிவித்தார்கள். கீர்த்தி சுரேஷும் இந்தப் படம் ஓட வேண்டும் என்று புரமோஷன் செய்து வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா, கீர்த்தியை பாதுகாக்குமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !