பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல்
அஜித் நடித்த குட் பேட் அக்லி வெளியாகி ஏழு மாதங்கள் ஓடிவிட்டது ஆனாலும் இன்னமும் அஜித் புது படத்தை தொடங்கவில்லை. மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்று கூறப்பட்டாலும், கார் ரேஸ், தயாரிப்பாளர், அஜித் சம்பளம், பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அஜித் படம் குறித்து பேட்டி அளித்துள்ள ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த படம் தொடங்கப்படும். அதற்கான முன் ஏற்பாடு வேலைகள் முடிந்து விட்டது. அது எந்த மாதிரியான படம், அதில் கார் ரேஸ் இருக்கிறதா, மல்டி ஸ்டார் படமா என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அது ஸ்பெஷலான படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கார் ரேசில் அஜித் சார் விருது வாங்கியது மகிழ்ச்சி, அது இந்தியாவிற்கு கவுரவம் என்றும் கூறியுள்ளார்.
அஜித் படத்தில் நடிப்பவர்கள் யார்? அது என்ன மாதிரியான ஜானர்? படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்ற விவரங்கள் அடுத்த ஆண்டு முதல் அறிவிக்கப்பட உள்ளன.