லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 'கூலி' படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. இதற்கிடையே அவர் இயக்கவிருந்த அமீர்கான் படமும் கைநழுவி போனது. இதனால் 'கைதி 2' பட பணிகளை மேற்கொண்டு வருகின்றார் என கூறப்பட்டது.
அதேசமயம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் 'டிசி' என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்து படத்திற்கான முன் தயாரிப்பு பணிக துவங்கியது என அவரது உதவி இயக்குநர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். லோகேஷ் அடுத்து தமிழில் ‛கைதி 2' படத்தை தான் ஆரம்பிக் போகிறார். அதேசமயம் அவர் தெலுங்கு படம் ஒன்றையும் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 'கைதி 2'-வா அல்லது தெலுங்கு படமா? என்பது பற்றி விரைவில் தகவல் வரும்.