கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா சண்முகநாதன். ‛வாரிசு, மை டியர் பூதம், காபி வித் காதல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த 'மதறாஸ் மாபியா கம்பெனி' படம் வெளியானது. இவர் ஏற்கனவே விவகாரத்து ஆனவர். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் மகனான அனிருத்தா ஸ்ரீகாந்த் உடன் இவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலானது. அனிருத்தாவும் கிரிக்கெட் வீரர் தான். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவரும் ஏற்கனவே திருமணமாகி பின்னர் மனைவியை பிரிந்துவிட்டார்.
சம்யுக்தாவும், அனிருத்தாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகின. இந்நிலையில் இன்று(நவ., 27) இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்க சம்யுக்தா - அனிருத்தா திருமணம் நடந்தது. இதுதொடர்பான போட்டோக்கள் வலைதளங்களில் வைரலாகின.