காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை
தனுஷ், கிர்த்தி சனோன் நடித்த 'தேரே இஷ்க் மெயின்' (தமிழில் தேரே இஷ்க் மே) படம், நாளை ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகை கிர்த்தி சனோன் ஆகியோருடன் காசிக்கு சென்றுள்ளனர். அங்கு மூவரும் வாரணாசியில் உள்ள ஒரு தியேட்டரில் உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து, 'தேரே இஷ்க் மெயின்' உருவான விதம், திரைக்கு பின்னால் நடந்த சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பிற்கு பிறகு, படக்குழுவினர் வாரணாசியின் தெய்வீக அழகை அனுபவித்தனர். புனிதமான காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து, படம் வெற்றிபெற ஆசிகளை பெற்றனர். சூரியன் மறையும் நேரத்தில் காசியில் புகழ்பெற்ற தசாஸ்வமேத படித்துறைக்கு சென்று, புகழ்பெற்ற கங்கா ஆரத்தியை மேற்கொண்டு, தரிசனம் செய்துள்ளனர்.