மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'களம்காவல்'. மம்முட்டியே தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். மம்முட்டி தவிர 'ஜெயிலர்' பட வில்லன் நடிகர் விநாயகன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சொல்லப்போனால் இந்த படத்தில் விநாயகன் ஒரு போலீஸ் அதிகாரியாக பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் மம்முட்டி வில்லத்தனம் வாய்ந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
நாளை (நவ.,28) இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்று நடிகர் மம்முட்டியே கூறியிருந்தார். இந்த நிலையில் வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று மீண்டும் மம்முட்டியே புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதுடன் நீங்கள் இந்த படத்திற்காக அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம் என ரசிகர்களை உற்சாகமும் படுத்தியுள்ளார்.