நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார்
ADDED : 33 minutes ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்தவர்கள் அம்பிகா, ராதா. சகோதரிகளான இவர்களின் தாயார் சரசம்மா நாயர் உடல் நலக்குறைவால் இன்று(நவ., 27) அதிகாலை காலமானார் அவருக்கு வயது 87. கேரளாவை பூர்வீகமாக கொண்ட சரசம்மாவின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.