லாக் டவுன் டிரைலர் வெளியானது
ஏஆர் ஜீவா இயக்கத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛லாக் டவுன்'. சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக் டவுனை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் டிரைலரை இன்று(நவ., 27) வெளியிட்டுள்ளனர். அதில் ஏதோ ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனுபமா அதை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்தச்சூழலில் லாக்டவுன் வேற போடப்படுகிறது. அனுபமாவிற்கு என்ன பிரச்னை என்பதன் பின்னணியில் நடக்கும் கதையாக இப்படம் இருக்கும் என தெரிகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக டிரைலரில் குறிப்பிட்டுள்ளனர். வரும் டிச., 5ல் படம் ரிலீஸாகிறது.