திடீர் நடிகையான தயாரிப்பாளர்
ADDED : 32 minutes ago
சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன், ஆனந்த் இணைந்து இயக்குகின்றனர்.
இரண்டு நாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. சந்தோஷ் பிரதாப் மற்றும் 'அப்புச்சி கிராமம்' படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். இதற்கான நாயகி தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தேவி தானே ஒரு நாயகியாக நடிக்க முடிவு செய்து விட்டார், இன்னொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
பொழுதுபோக்கு மற்றும் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. ஸ்ரீவேனுவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்சன் இசையமைக்கிறார்.