உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம்

பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம்

பொதுவாக ரீமேக் படங்கள் அதிகம் வெற்றி பெறுவதில்லை. காரணம் வெற்றி பெற்ற ஒரு படத்தை தான் ரீமேக் செய்வார்கள், அப்படி ரீமேக் செய்யும் படங்கள் மூலப் படத்தை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்ததாக இருந்தால் மட்டுமே அந்த படம் வெற்றி பெறும் என்பது தான் எதார்த்தமான உண்மை. தமிழ் சினிமாவில் ரீமிக்ஸ் படங்கள் வெற்றி பெற்றது மிகவும் அபூர்வமான ஒன்று. முந்தைய படத்தோடு ரசிகர்கள் ஒப்பிடுவதால் கூட பல படங்கள் தோல்வியடைந்தது.

இப்படியான ஒரு நிகழ்வு 1955ம் ஆண்டு நிகழ்ந்து. வடவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல் 'மேனகா'. புகழ்பெற்ற இந்த நாவலை 1939ம் ஆண்டு திரைப்படமாக தயாரித்தனர். இதனை ராஜா சான்டோ இயக்கினார். பி. கே. சண்முகம் டி. கே. பகவதி நடித்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முதல் சமூகக் கதை அம்சம் கொண்ட படம் இது.

இதே படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1955ம் ஆண்டு அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதனை சுப்புராமன் இயக்கினார். கேஆர். ராமசாமி, லலிதா, ராகினி நடித்தனர். ஆனால் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இதற்கு காரணம் முதல் படத்தில் இருந்த அழுத்தமான திரைக்கதையும், நடிப்பும் ரீமேக்கில் இல்லை எனவும் முதல் படம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால் இந்தப் படத்தை மக்கள் ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது.

தீய சக்திகளால் பிரிக்கப்பட்ட ஒரு காதல் ஜோடி பல்வேறு துன்ப துயரங்களுக்கு பிறகு மீண்டும் இணைவது தான் இந்த படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !