உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம்

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம்

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ம்ருதி வெங்கட். அதன்பிறகு தடம், மூக்குத்தி அம்மன், வனம், தீர்ப்புகள் விற்கப்படும், மன்மத லீலை, குற்றம் குற்றமே, ரன் பேபி ரன், தருணம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள படம் 'ஸ்டீபன்'.

அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜே.எம் புரொடக்சன் சார்பில் ஜெயக்குமார் மோகன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

படம் குறித்து மிதுன் பாலாஜி கூறும்போது குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல், ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. குற்ற உணர்வுக்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான இடைவெளி மங்கலாகி, நினைவுகள் மிகவும் மோசமான ஒன்றாகத் திரும்பும்போது கதை எப்படி பயணிக்கிறது என்பதுதான் 'ஸ்டீபன்'. படத்தில் உள்ள முக்கிய அம்சம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !