உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம்

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம்

கோவாவில் நடந்து வரும் 56வது சர்வதேச திரைப்பட விழாவில் 'ஆக்காட்டி' என்ற தமிழ் படம் 'சிறந்த அடையாளத் திரைப்படம்' என்ற பிரிவில் விருது பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குனர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர்.

தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர்வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி, இவர்களின் மகனாக சுபாஷ் நடித்துள்ளனர். எஸ்.இ.எசக்கி ராஜா ஒளிப்பதிவு தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்துள்ளார் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !