மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு
ADDED : 42 minutes ago
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் குடும்பத்தில் இருந்து அவரது (மறைந்த) அண்ணன் ரமேஷ் பாபுவின் மகனான ஜெய கிருஷ்ணா கட்டமனேனி திரையுலகில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் மகள் ராஷா தடானி நடிப்பதன் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகிறார்.
ஆர் எக்ஸ் 100 புகழ் இயக்குனர் அஜய் பூபதி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது ஸ்ரீனிவாச மங்காபுரம் என டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.