மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள்
மலையாள திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழில் தங்களுக்கு என ஒரு இடத்தை தக்க வைத்துள்ளவர்கள் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரனும் ரஜிஷா விஜயனும். கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன் என இருவருமே தனுஷ் உடன் ஜோடியாக நடித்து வெற்றி பட நாயகி ஆக மாறியவர்கள் தான். கடந்த மாதம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் காளமாடன் படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தமிழில் லாக் டவுன் என்கிற படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள களம் காவல் படத்தில் ரஜிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கின்றன. பைசன் படத்தை தொடர்ந்து ஒரே நாளில் இவர்களது படங்கள் மீண்டும் வெளியாவது ஆச்சரியமான ஒற்றுமை தான்.