திரையுலக பயணம் 33 ஆண்டுகள் நிறைவு: டிச.4ல் வெளியாகிறது 'ஜனநாயகன்' இரண்டாம் பாடல்
ADDED : 61 days ago
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். அவரது கடைசி படமான இந்த படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் வெங்கட் கே.நாராயணா இந்த படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் 'தளபதி கச்சேரி' என்ற பாடலை வெளியாகியுள்ள நிலையில் அடுத்தபடியாக விஜய் திரையுலகில் நடிக்க வந்து 33 ஆண்டுகள் ஆவதையொட்டி டிசம்பர் 4ம் தேதி இப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடுகிறார்கள். அதோடு, டிசம்பர் 27ம் தேதி, மலேசியாவில் இப்படத்தின் இசை விழா பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், புத்தாண்டு தினத்தில் 'ஜனநாயகன்' டிரைலர் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.