உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா

பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா

தமிழில் ‛அரண்மனை 4' படத்தில் நடித்த தமன்னா, பின்னர் தெலுங்கில் வெளியான ஒடேலா 2 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். அதையடுத்து ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ரெய்டு 2 படத்திலும் நடித்தார். அடுத்து தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் மறைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் வி.சாந்தாராமின் வாழ்க்கை வரலாறு படத்திலும் அவரது மனைவி சந்தியாவாக நடிக்கபோகிறார் தமன்னா. இப்படத்தில் இயக்குனர் சாந்தாராம் வேடத்தில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி நடிக்கிறார். ஹிந்தியில் வெளியான நட் சாம்ராட் என்ற படத்தை இயக்கி பிரபலமான அபிஜித் சிரிஷ் தேஷ்பாண்டே என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !