உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ?

இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ?

கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் டிசம்பர் 5ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது டிசம்பர் 12க்கும் தேதி மாறுகிறது. சூதுகவ்வும் பட புகழ் நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் எம்ஜிஆருக்கும், கார்த்தி கேரக்டருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த தலைப்பு. ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தயாரித்த கங்குவா படம் பைனான்ஸ் ரீதியாக சிக்கலில் மாட்டியதால், இந்த பட ரிலீசில் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல், டிசம்பர் 2வது வாரத்தில் ரிலீஸ் ஆவதாக இருந்த அருண் விஜயின் 'ரெட்ட தல' படமும், டிசம்பர் 25க்கும் மாறியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். தலைப்புக்கு ஏற்ப இரண்டு வேடத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.

இந்த வாரம் கீதா கைலாசம் நடித்த அங்கம்மாள், அனுபமா பரமேஸ்வரின் லாக்டவுன், சாக்ஷி அகர்வாலின் சாரா உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. டிசம்பர் 12ல் விமலின் மகாசேனா, லியோ சிவாவின் மாண்புமிகு பறை மற்றும் சல்லியர்கள் படமும், டிசம்பர் 18ல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே படமும் ரிலீஸ் ஆக உள்ளன.

டிசம்பர் 5ல் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா 2 படமும், தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் வருகிறது. நவம்பர் மாதம் பெரிய வெற்றிகள் கிடைக்காத நிலையில், டிசம்பர் எப்படி இருக்குமோ என கோலிவுட் தவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !