உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல்

பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல்


நடிகர் துல்கர் சல்மான் கடந்த பத்து வருடங்களில் மலையாள திரை உலகையும் தாண்டி தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுடிலும் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட மூன்று படங்களில் நடித்த முடித்து விட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'காந்தா' திரைப்படம் ஓரளவுக்கு டீசன்டான வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகி வரும் 'ஐ அம் கேம்' என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த சமயத்தில் சமீபத்திய பேட்டி ஒன்று நடிகர் துல்கர் சல்மான் பாலிவுட்டில் தான் நுழைந்தபோது சந்தித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, “ஹிந்தி படங்களின் படப்பிடிப்பு நடைபெற்ற போது நான் என்னுடன் சேர்த்து இருவரை அழைத்துக்கொண்டு செல்வது வழக்கம். சில நேரங்களில் எங்களுக்கு உட்காருவதற்கு கூட நாற்காலி கிடைக்காது. அதனால் அவர்களை அழைத்துக் கொண்டு அப்படியே படப்பிடிப்பு தளத்தை சுற்றி வந்து கொண்டிருப்பேன். அவ்வளவு ஏன், சில நேரங்களில் மானிட்டரின் அருகில் சென்று அமர்வதற்கு கூட எனக்கு ஒரு இடம் கிடைக்காது. அங்கே நிறைய பேர் கூடியிருப்பார்கள். அவர்கள் பார்வையில் ஒரு மிகப்பெரிய காரில் பல ஆட்களுடன் வந்தால் அவர் ஒரு பெரிய ஸ்டார் என்கிற மனோபாவம் இருக்கிறது. மற்றவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு பெரிய பொருட்டல்ல” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !