உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3'

ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3'


மலையாள சினிமா சமீப வருடங்களில் தான் நூறு கோடி என்கிற வசூல் இலக்கை எல்லாம் தாண்டி 200 கோடி என்கிற புதிய வசூல் கிளப்பை உருவாக்கியது. சமீபத்தில் வெளியான 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் 270 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விண்ணைத் தொடும் மலையாள சினிமா என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் விவாத கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூலித்த 'தொடரும்' படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எம் ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “மலையாள சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தற்போது தயாரிப்பில் இருக்கும் 'திரிஷ்யம் 3' படத்திற்கு முன் வியாபாரம் மட்டுமே 350 கோடி ரூபாய் நடைபெற்றுள்ளது'' என்கிற ஒரு தகவலையும் தெரியப்படுத்தினார்.

ஏற்கனவே மோகன்லால் படத்தில் அவர் மிகுந்த லாபம் சம்பாதித்தவர் என்பதாலும், அந்த வியாபாரங்களை அறிந்தவர் என்பதாலும் திரிஷ்யம் 3 படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாகவும் நிச்சயமாக லோகா படத்தின் தியேட்டர் வசூல் சாதனையையும் திரிஷ்யம் 3 முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !