இந்த ஆண்டு 3வது யானை படம்
தமிழில் இந்த ஆண்டு யானையை கதைக்களமாக வைத்து படைதலைவன், கும்கி 2 ஆகிய படங்கள் வந்துள்ளன. படைதலைவன் படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்தார். பிரபுசாலமான் இயக்கிய கும்கி 2வில் லிங்குசாமி உறவினர் மதி நடித்தார். இரண்டு படங்களும் ஓடவில்லை. யானையை பலி கொடுப்பதை ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்பது இந்த படங்களின் கரு. அடுத்ததாக விமல் நடிக்கும் மகாசேனா படமும் யானை பற்றிய கதையாக உருவாகிறது. தினேஷ் கலைசெல்வன் இயக்கும் இந்த படத்தில் சேனா என்பது யானையின் பெயர். ஒரு யானை முக்கியமான கேரக்டரில் நடிக்கிறது. அதை எதிரிகளிடம் இருந்து எப்படி பாதுகாக்கிறார் ஹீரோ என்ற ரீதியில் கதை நகர்கிறது. கூடலுார், வயநாடு, கொல்லிமலை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. தெய்வீக இயற்கை சக்தியும், மனிதன் பேராசைக்கும் இடையேயான சண்டையே படக்கருவாம். டிசம்பர் 12ம் தேதி மகாசேனா படம் வருகிறது.