உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன்

ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ல் வெளியான படம் ஜெயிலர். இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது ஜெயிலர் 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்களுடன்அதில் சிறப்பு தோற்றங்களில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர். புதிதாக எஸ்ஜே சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் நடிக்கின்றனர்.

அதேசமயம் முதல் பாகத்தில் படத்தை தாங்கிப் பிடிக்கும் வலுவான வர்மா என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விநாயகன். படத்தின் கிளைமாக்ஸில் அவர் இறந்து போவதுபோல காட்சி இருப்பதால் அவரைப்பற்றிய பேச்சே ஜெயிலர் 2 பட்டியலில் அடிபடவில்லை. ஆனால் விநாயகனும் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது தான் தற்போது வெளியாகியுள்ள ஆச்சரியமான தகவல்.

விரைவில் மலையாளத்தில் வெளியாக இருக்கும் களம்காவல் என்கிற படத்தில் நடித்துள்ள நடிகர் விநாயகனே, இந்த படத்தின் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் மேற்கொண்டு எந்த விபரத்தையும் கூற அவர் மறுத்துவிட்டார். வர்மா கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும் கூட அதன் காமெடிக்காக எப்போதுமே அது என்னுடைய பேவரைட் கதாபாத்திரம் என்றும் கூறியுள்ளார் விநாயகன்.

ஒருவேளை படத்தில் விநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில பிளாஷ்பேக்கில் காட்டப்படலாம் என்பதால் இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் இடம்பெறுகிறார் என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !