லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்?
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கிய லாக்டவுன் படம் சிறப்பு திரையிடலாக திரையிடப்பட்டது. லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.
அனுபமா பரமேஸ்வரன் இதில் கதைநாயகியாக நடித்துள்ளார். சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு , என்.ஆர்.ரகுநந்தன் - சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
நேற்று இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் மழை உள்ளிட்ட காரணங்களால் படம் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்த வாரம் லாக்டவுனை ரிலீஸ் செய்யப்போகிறார்களாம். எத்தனையோ பிரமாண்ட படங்களை தயாரித்த லைகா நிறுவனம் இந்த படத்தை த யாரித்து இருந்தாலும் பட பிரமோஷன்களில் அவர்கள் ஏனோ கவனம் செலுத்தவில்லை.
பைசன் படத்துக்காக பல நாட்கள் சென்னையில் இருந்து படம் குறித்து பேசிய அனுபமா பரமேஸ்வரன் கூட, தான் கதைநாயகியாக நடித்த இந்த படம் குறித்து பேச தயங்குகிறார். பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது இல்லை. படக்குழுவினருடன் மோதலா? சம்பள பிரச்னையா என கேள்வி எழுந்துள்ளது.