பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் 2026ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகை வாரத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த படத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக இந்த படத்திற்காக பயன்படுத்திய 60 காலகட்டத்தில் உள்ள பொருட்கள் போலவே இப்போது உருவாக்கிய பொருளை ஒரு பிரமாண்டமான கண்காட்சி ஆக சென்னையில் ' தி வேர்ல்ட் ஆப் பராசக்தி' என்கிற பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி டிசம்பர் 16ம் தேதியன்று துவங்கி தொடர்ந்து ஒரு வாரம் ஆவது நடத்த திட்டமிட்டுள்ளனர்.