மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா?
ADDED : 5 minutes ago
நடிகர் அஜித்குமார் சினிமா, ரேஸ் என இரண்டிலும் மாறி மாறி கவனம் செலுத்துகிறார். சமீபகாலமாக அவர் ரேஸிங் தொடர்பாக பல்வேறு பேட்டிகளையும் அவர் அளித்து வருகிறார். அதேபோல் அஜித்குமார் நீண்ட வருடங்களாக விளம்பர படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் தற்போது ரேசிங் நிறுவனத்தின் ஸ்பான்சர் கேம்பா கோலா குளிர்பானத்திற்காக ஒரு விளம்பர படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது மலேசியாவில் கார் ரேஸ் போட்டிக்காக சென்றுள்ளார். இந்த போட்டியின் போதே இந்த கேம்பா விளம்பர படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விளம்பர படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். சிறுத்தை சிவா மலேசியாவில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.