உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்

ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோவாக இருந்தார் ஜி.வி.பிரகாஷ். குறைந்த சம்பளம், பந்தா இல்லாத தன்மை உள்ளிட்ட சில காரணங்களால் அவரை வரிசையாக புக் செய்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியும் அடைந்தன. அவரே தயாரித்து, ஹீரோவாக நடித்த கிங்ஸ்டன் படமும், அடுத்து வந்த பிளாக்மெயிலும் தோல்வி அடைய, படத்தில் நடிப்பத குறைத்துவிட்டு, அவர் இசையில் கவனம் செலுத்தணும். கதையில் கவனம் செலுத்தணும். அதிக படங்களில் நடிப்பதை தவிர்க்கணும் என்று பலரும் அட்வைஸ் செய்தனர்.

இப்போது நடிப்பதை குறைத்துவிட்டாலும் அவர் கைசவம் இடி முழக்கம், மெண்டல் மனதில், இம்மார்ட்டல் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக ஹேப்பிராஜ் படத்திலும் நடித்து வருகிறார். இசையமைப்பாளராக அவர் ஜெயித்துக் கொண்டே வருகிறார். அவர் இசையமைத்த படங்கள் ஹிட்டாகி வருகின்றன. அதற்காக 2 தேசிய விருது வாங்கிவிட்டார். ஆனாலும், ஹீரோவாகவும் ஜெயிக்க வேண்டும் என்பது அவர் ஆசையாம். கைவசம் இருக்கிற படங்களில் ஒன்று இரண்டாவது அடுத்த ஆண்டு ஹிட் ஆக வேண்டும் என்று நினைக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !