23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள்
ADDED : 38 minutes ago
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை நடக்கிறது. இதில் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன. 27 மொழிகளில் இருந்து, 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழில் இருந்து அலங்கு, வேம்பு, மாயகூத்து, மருதம், காதல் என்பது பொது உடமை, டூரிஸ்ட் பேமிலி, 3 பிஎச்கே, மாமன், ஒன்ஸ் அபான் டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, பிடி மண், ஆகிய 12 படங்களில் தமிழ் பிரிவில் போட்டி போடுகின்றன. தமிழக அரசு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இந்த விழாவை நடத்துகிறது. சென்னையில் பிவிஆர் மற்றும் சத்யம் தியேட்டரில் படங்கள் திரையிட்படுகின்றன.