உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா?

தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா?

சென்னையில் பிறந்த வளர்ந்த சூர்யா, இப்போது குழந்தைகளின் படிப்பு, ஜோதிகா விருப்பத்துக்கு இணங்க மும்பையில் வசிக்கிறார். சென்னை தி.நகரில் பல கோடி மதிப்புள்ள பங்களா இருந்தாலும் அதில் அவர் அப்பா சிவகுமார், தம்பி கார்த்தி மட்டுமே வசிக்கிறார்கள். சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு படம் ரிலீஸ். அடுத்து வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லுாரி படத்தில் நடித்து வருகிறார். லேட்டஸ்ட்டாக, பஹத் பாசில் நடித்த நடித்த ஆவேசம் என்ற மலையாள படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் படத்தில் நடிக்கிறார்.

சென்னையில் நேற்று பூஜை நடந்துள்ளது. அடுத்து ஹிந்தி பட இயக்குனருக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார். ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. மும்பையில் செட்டில் ஆன சூர்யா தமிழ் இயக்குனர்களை தவிர்த்து தெலுங்கு, மலையாள, ஹிந்தி இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுக்க காரணங்கள் இருக்கிறது. அவர் நடித்த சில தமிழ் படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக, கங்குவா படத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தாலும், அதை ட்ரோல் செய்தார்கள். கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதனால் அந்த படத்தில் வெற்றியும், பல கோடி வசூலும் பாதிக்கப்பட்டது. அந்த ஆதங்கத்தில் சூர்யா மனநிலை இப்படி மாறியுள்ளது என்கிறார்கள்.

ஆனால், அவர் தரப்போ, வெங்கி அட்லுாரி, ஜீத்து மாதவனிடம் நல்ல கதை இருந்ததால் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவருக்கு பெரிய வெற்றி தேவைப்படுவதால், வெற்றி பெற்ற இயக்குனர்களிடம் இணைந்துள்ளார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !