உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து

கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து

மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் மலையாள நடிகைகளான பார்வதி, ரீமா கலிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் பெண்கள் நல அமைப்பு என்று ஒன்றைத் துவங்கி பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப்பும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட, விரைவில் இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்க வேண்டும் என அடிக்கடி அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் எர்ணாகுளம் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் திலீப் குற்றம் அற்றவர் என்றும் அவருக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்றும் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த சம்பவத்தில் முதன்மை குற்றவாளியாக பல்சர் சுனில் உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என நிரூபணம் ஆகி உள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரீமா கல்லிங்கள், பார்வதி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளனர். பார்வதி வெளியிட்டுள்ள பதிவில், “எது நீதி ? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதை இப்போது நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்த தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிற கருத்தை அவர் பலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !