பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டாத்தில் பங்கேற்று வைரல் ஆனவர் ஜூலி. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் பின்னர் சினிமாவிலும் களமிறங்கினார். ஒரு படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின் மாடலிங் துறையில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது.
மணமகன் பெயர் முகமது இக்ரீம். அவரது முகத்தை காண்பிக்காமல் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஜூலி, ‛‛நீங்கள் அமைதியானவர். நீங்கள் என்னை பலவீனமான இடத்தில் பார்த்தீர்கள், நேசித்தீர்கள். இது வாக்கு அல்ல, இது ஒரு சபதம். வேட்புமனுவை(நிச்சயதார்த்தம்) தாக்கல் செய்துவிட்டேன். வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருக்க தயாராக இருக்கிறேன். அவரை காண நீங்கள் காத்திருக்க வேண்டும். எனக்கு ஏற்ற சரியான நபர்'' என குறிப்பிட்டுள்ளார்.