உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை

தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை

கார்த்தி, கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படம் நாளை மறுதினம் டிசம்பர் 12ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க வியாபாரம் உள்ளது. அவருடைய படங்கள் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாகும்.

அதுபோல 'வா வாத்தியார்' படத்தையும் 'அண்ணாகாரு ஒஸ்தாரு' என்ற பெயரில் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதே நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிடுகிறார்கள். இப்படத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் கார்த்தியும், கிர்த்தி ஷெட்டியும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, பாலகிருஷ்ணா நடித்துள்ள பிரம்மாண்டத் தெலுங்குத் திரைப்படமான 'அகண்டா 2' படத்தை டிசம்பர் 12ம் தேதி வெளியிடுவதாக நேற்று அறிவித்தனர். கடந்த வாரமே வெளியாக வேண்டிய இப்படத்தைப் பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எதிர்பாராமல் இந்தப் படம் இந்த வாரம் வெளியாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், 'அண்ணாகாரு ஒஸ்தாரு' படத்திற்கு 'அகண்டா 2' படம் மிகப் பெரும் போட்டியாக மாறியுள்ளது. பாலகிருஷ்ணா படத்தைப் பார்க்கும் பேராவலில் உள்ள ரசிகர்கள் இந்த 'அண்ணாகாரு'வையும் பார்க்க வருவார்களா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !