மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென்
மலையாளத்தில் அன்னாபென் நடித்த படங்களுக்கு தனி மவுசு. குறிப்பாக, ‛கும்பளங்கி நைட்ஸ், ஹெலன், கப்பலோ' படங்கள் அவர் நடிப்புக்காக பேசப்பட்டன. ‛கல்கி 2898 ஏடி' படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த ‛கொட்டுக்காளி' படத்தில் நடித்தார். அந்த படத்தை ஆஹோ ஓஹோவென ஒரு தரப்பு புகழ்ந்தாலும், நிறைய விருதுகள் பெற்றாலும் தியேட்டரில் படம் ஓடவில்லை. இதனால் அன்னா பென் அப்செட் ஆனார். தமிழில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், ஹரிஷ்துரைராஜ் இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிக்கிறார். இதில் யோகிபாபும், வடிவுக்கரசியும் இருக்கிறார்கள். இந்த நால்வரை சுற்றி பேமிலி என்டர்டெயினராக கதை நடக்கிறதாம். இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. அதை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்னமும் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட வில்லை.