கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர்
ADDED : 17 minutes ago
விலங்கு வெப் தொடரின் மூலம் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து இவர் நடிகர் சூரியை வைத்து 'மாமன்' என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்தப்படியாக இவர் மீண்டும் ஒரு வெப் தொடரை இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதில் கதையின் நாயகனாக முதலில் பால சரவணன் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. இதனால் இப்போது பிரசாந்த் பாண்டியராஜே இதில் கதையின் நாயகனாக நடித்து நடிகராாக களமிறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக எடுக்கப்படுகிறதாம்.