உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன்

வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன்

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள புகழ்பெற்ற ஈவிபி பிலிம் சிட்டி ஐசரி கணேஷ் குழுமம் வசமாகிறது. அங்கே வேல்ஸ் ட்ரேட் சென்டர், வேல்ஸ் பிலிம் சிட்டி ஆகியவை பிரமாண்டமாக உருவாகிறது. நாளை மறுநாள் நடக்கும் விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எல் முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் அதை முறைப்படி தொடங்கி வைக்கின்றனர்.

சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பொழுது போக்கு பூங்காவாக இருந்த இடம் பிற்காலத்தில் ஈவிபி பிலிம் செட்டியாக மாறியது. அங்கே முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள், டிவி சீரியல், டிவி நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக பிக் பாஸ் வீடு செட் அங்கே தான் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஈவிபி பிலிம் சிட்டி ஐசரி கணேஷ் வேல்ஸ் குழுமம் வசமாகி இன்னும் பல வசதிகளுடன் திரைப்பட நகராகவும் கருத்தரங்கம் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தும் இடமாகவும், பல தியேட்டர்களுடன் செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !