பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ்
ADDED : 16 minutes ago
பழம்பெரும் இயக்குனரான டி ஆர் ராமண்ணா 1980களிலும் படங்களை இயக்கினார். அதில் ஒரு படம் தான் 'இலங்கேஸ்வரன்'. ராமாயணத்தில் வரும் தனித்தனி கதாபாத்திரங்களை கொண்டு ஏராளமான படங்கள் வந்திருந்த போதும் முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்த படத்தில் இயக்கியிருந்தார்.
இலங்கேஸ்வரனாக நடிக்க அன்றைய முன்னணி நடிகர்கள் தயங்கிய நிலையில் கடைசியாக நடிகர் ராஜேஷ் இலங்கேஸ்வரனாக (ராவணனாக) நடிக்க வைத்தார். கே ஆர் விஜயா மண்டோதரியாகவும், ரேவதி சீதாவாகவும் ஸ்ரீபிரியா சூர்ப்பனயாகவும் நடித்தனர். ஸ்ரீ சிவகாமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் கே. முனிரத்னம் தயாரித்தார். எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். படம் வெற்றி பெறவில்லை.