எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல்
ADDED : 19 minutes ago
பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த ப்ராங்க் ஸ்டார் ராகுல் கிராண்ட் பாதர் படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். பேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக் ஷன் கலந்த உணர்ச்சி பூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகளாக உருவாகும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் , மைம் கோபி, ஹரீஷ் பேரடி உட்பட பலர் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள் இருவர் சர்ப்ரைஸ் கேமியோ ஆக நடிக்கிறார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க் ஸ்டார் இயக்கும் படம் என்பதால் படத்தில் காமெடியும் இருக்குதாம்.