உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம்

பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம்


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறை சேர்ந்த ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் அளித்தார் அந்த வரிசையில் அவர் விஜயகாந்துடன் நடித்த படம் 'வீரபாண்டியன்'.

கார்த்திக் ரகுநாத் இயக்கிய இந்த படத்தை இயக்குனர் துரை தயாரித்தார். சங்கர்- கணேஷ் இசை அமைத்தனர். அசோக் சவுத்ரி ஒளிப்பதிவு செய்தார்.

சிவாஜி கணேசன், விஜயகாந்த், ராதிகா, ஜெய்சங்கர், ராதாரவி, ரஞ்சித், வி. கே. ராமசாமி பண்டரிபாய், சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பல கோடி மதிப்புள்ள கோவில் நகைகளை திருட முயற்சிக்கும் ஒரு கும்பலுக்கும் அதை தடுக்க போராடும் ஹீரோவுக்குமான கதை. சிவாஜி பஞ்சாயத்து தலைவராகவும் விஜயகாந்த் அவரது மகனாகவும் நடித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !